Advertisment

திருமணத்திற்கு முன்பே கரு முட்டைகளை உறைய வைத்த நடிகை : காரணம் என்ன? வைரல் வீடியோ

தனக்கு எப்போது திருமணம் என்று முடிவு செய்யாத நடிகை மெஹ்ரீன், எதிர்காலத்தில் தனது திருமண வாழ்கை மகிழ்ச்சியாக அமையும் வகையில் தனது கருமுட்டைகளை உறைய வைப்பதாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Maheers

தனது எதிர்கால திருமண வாழ்க்கையை கருத்தில் கொண்டு தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

Advertisment

பொதுவாக சினிமா நடிகைகள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பது அவர்களுக்கு வரும் சினிமா வாய்ப்புகளை பொறுத்தே அமையும். சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பு அதிகரிக்கும்போது அவர்களின் திருமணத்தை தள்ளிபோட்டுவிடுவார்கள். இதன் காரணமாக சில நடிகைகள் 40 வயதை கடந்த பின்னரும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தனக்கு எப்போது திருமணம் என்று முடிவு செய்யாத நடிகை மெஹ்ரீன், எதிர்காலத்தில் தனது திருமண வாழ்கை மகிழ்ச்சியாக அமையும் வகையில் தனது கருமுட்டைகளை உறைய வைப்பதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கடந்த 2 வருடங்களாக இதை செய்வதற்கு என்னை மனதளவில் தயார் செய்துகொண்டு இதை செய்து முடித்திருக்கிறேன்.

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தனிப்பட்ட விஷயத்தை பகிரலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ஆனால் என்னை போல் எத்தனையோ பெண்கள் எப்போது திருமணம் செய்துகொள்வது குழந்தை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்யாமல் இருக்கின்றனர். எதிர்காலத்தில் உங்களை பாதுகாத்துக்கொள்ளவும், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்கும் பெண்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

தாயாக வேண்டும் என்பது எனது கனவு. எனது திருமணம் இன்னும் சில ஆண்டுகள் தாமதமாகிவிட்டால், அந்த கனவு நிறைவேறுவதில் சிக்கல் இருக்குமா என்று தெரியவில்லை. அதனால் தான் இந்த முடிவு. இது சில சமயங்களில் என்னை காயப்படுத்தியது. இந்த பயணத்தில் என்னுடன் இருந்த அம்மா மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment