Advertisment

இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் முதல் படம் : இந்த ''பிலடி பெக்கர்'' யார்னு தெரியுதா பாருங்க!

ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தாயரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
biggboss Kabvi

கவின்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனது முதல் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Advertisment

கோலமாகவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் விஜய் நடிப்பில் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்து இவர் இயக்கிய ஜெயிலர் படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. இதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வமான படைப்புகளை உருவாக்க விரும்பும் நெல்சன் திலீப் குமார், தனது நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை (மே3) வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் ஃபிலமென்ட் பிக்சர்ஸில்ரசிகர்களை மகிழ்விக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான படங்களை உருவாக்குவதே எங்கள் முதன்மை குறிக்கோள். எங்கள் பார்வையை மிகச்சரியாக உள்ளடக்கிய மற்றும் நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கும் ஒரு படத்தை நாங்கள் தொடங்குகிறோம். மே 3 ஆம் தேதி இது குறித்த அறிவிப்புக்காக காத்திருங்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி!" என தெரிவித்திருந்தார்.

இதனிடையே அவர் தயாரிக்கும் முதல் படத்தின் பெயர் பிலடி பெக்கர் என்று டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் கவின் நாயகனாக நடிக்கிறார். சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கவின் பிச்சைக்காரர் கெட்டப்பில் அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கவினின் வித்தியாசமான கெட்டப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Biggboss Kavin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment