Advertisment

சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு வழக்கு: கைதான நபர் மும்பை போலீஸ் லாக்கப்பில் தற்கொலை

32 வயதான அனுஜ் தபன், பஞ்சாபில் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 14-ம் தேதி சல்மான் கான் வீட்டிற்கு வெளியே 5 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகள் வாங்குவதில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Salman Khan

மும்பையின் பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி புதன்கிழமை போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

32 வயதான அனுஜ் தபன், பஞ்சாபில் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 14-ம் தேதி சல்மான் கான் வீட்டிற்கு வெளியே 5 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகள் வாங்குவதில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Accused in Salman Khan house firing case dies by suicide in Mumbai police lockup

மும்பையின் பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி புதன்கிழமை போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மும்பை போலீஸ் தலைமையகத்தில் லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்த அனுஜ் தபன், 32, ஜி.டி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவம் காலை 11 மணியளவில் முதல் மாடியில் உள்ள போலீஸ் லாக்-அப்பின் குளியலறையில் நடந்தது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

மும்பை போலீஸ் தலைமையகத்தில் லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்த அனுஜ் தபன் (32), ஜி.டி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  “இந்த சம்பவம் காலை 11 மணியளவில் முதல் மாடியில் உள்ள போலீஸ் லாக்-அப்பின் குளியலறையில் நடந்தது” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர் வாக்குமூலங்களை பதிவு செய்ய அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தபன் மற்ற வழக்குகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 10 பேருடன் ஒரு அறையில் இருந்ததாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. காலை 11 மணியளவில் குளியலறைக்கு சென்ற அவர் அங்கே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தெளிவான தகவலும் இல்லை என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

தபன் கடந்த வாரம் பஞ்சாபிலிருந்து மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 14-ம் தேதி சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே 5 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகளை வாங்குவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தாபனைத் தவிர, சல்மான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த சாகர் பால் மற்றும் விக்கி குப்தா உள்ளிட்ட 3 பேரை மும்பை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். மூன்றாவது குற்றவாளியான சோனு பிஷ்னோய் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Salman Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment