Advertisment

CSK vs PBKS Highlights: பந்துவீச்சிலும் சொதப்பிய சென்னை : பஞ்சாப் அசத்தல வெற்றி

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது

author-image
WebDesk
New Update
CSK vs PBKS LIVE Score IPL 2024 Match 49 today Chennai Super Kings vs Punjab Kings  scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்

IPL 2024 | Chennai Super Kings | Punjab Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: CSK vs PBKS LIVE Score, IPL 2024

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து சென்னை அணி முதலில் களமிறங்கியது. ருத்துராஜ் கெய்க்வாட் - ரஹானே இருவரும் சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தபோது ரஹானே ஆட்டமிழந்தார். 24 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய சிக்சர் மன்னன் ஷிபம் டூபே முதல் பந்திலேயே ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஜடேஜா 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் சென்னை அணி 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சமீர் ரிஸ்வி நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 37 ரன்கள் சேர்த்தபோது ரிஸ்வி 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் நிதானமாக விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்த நிலையில், 48 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து வெளியேறினார். கடைசியில் ஒரு சிகசர் ஒரு பவுண்டரி அடித்த மொயின் அலி 15 ரன்களில் வெளியேறிய நிலையில், கடைசி ஓவரை எதிர்கொண்ட தோனி, ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்தார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. மிச்செல் ஒரு ரன்னுடனும், தோனி 11 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் பிரார், ராகுல் சாஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரை வீசிய தீபக் சஹார் 2 பந்துகளை வீசிய நிலையில், காயம் காரணமாக அவர் பாதியில் வெளியேற, மீதி பந்துகளை ஷர்துல் தாகூர் வீசினார். பிரப் சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்து பேர்ஸ்டோ ருஸோ அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 30 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 46 ரன்களும், ரூஸோ 23 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தாலும், 4-வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கரன், ஷஷாங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 17.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷஷாங் 26 பந்துகளில் 25 ரன்களும், சாம் கரன், 20 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் தாகூர், க்ளீசன், டூபே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • May 01, 2024 23:27 IST
    17.5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றி

    17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது,



  • May 01, 2024 22:09 IST
    5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 39/1

    163 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள பஞ்சாப் அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.



  • May 01, 2024 22:01 IST
    முதல் விக்கெட்டை பறிகொடுத்த பஞ்சாப் அணி

    அறிமுக வீரராக களமிறங்கிய சென்னை அணியின் க்ளீசன் பஞ்சாப் அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். பிரப்சிம்ரன் 10 பந்துகளில் 13 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



  • May 01, 2024 21:09 IST
    ருத்துராஜ் கெய்க்வாட் அவுட்

    அரைசதம் கடந்த ருத்துராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தற்போது சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை பறிகொடுத்தது.



  • May 01, 2024 20:57 IST
    ருத்துராஜ் அரைசதம்

    44 பந்துகளை சந்தித்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை அணி 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது



  • May 01, 2024 20:41 IST
    14 ஓவர்கள் முடிவில் சென்னை 90/3

    14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வி 15 ரன்களுடனும், கெய்க்வாட் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • May 01, 2024 20:20 IST
    3-வது விக்கெட்டை பறிகொடுத்த சென்னை திணறல்

    4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது சென்னை அணி 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.



  • May 01, 2024 20:10 IST
    அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை

    8.2 ஓவர்களில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷவம் டூபே முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.



  • May 01, 2024 20:00 IST
    6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 55/0

    6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 16 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 25 ரன்களும், ருத்துராஜ் 20 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 25 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.



  • May 01, 2024 19:53 IST
    4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 23/0

    4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ரஹானே - ருத்துராஜ் ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது.



  • May 01, 2024 19:16 IST
    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிக வயதில் அறிமுகம்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த போட்டியில் களமிறங்கும் ரிச்சர்டு க்ளீசன் 36 வயது 151 நாட்களில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகிறார். இதன் மூலம் அதிக வயதில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அறிமுகமான 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் சிக்கந்தர் ராசா 36 வயது 342 நாட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.



  • May 01, 2024 19:15 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 மாற்றம்

    சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் பதிரானா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷார்துல் தாக்கூர், மற்றும் 36 வயதான ரிச்சர் க்ளீசன் இணைந்துள்ளனர்.  



  • May 01, 2024 19:02 IST
    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு

    டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.



  • May 01, 2024 18:19 IST
    இன்று புதிய ஆடுகளம்

    சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் நடக்கும் சென்னை சேப்பாக்கத்தில் ஒருபுறம் குறுகிய பவுண்டரி அமைக்கபட்டுள்ளது. மேலும், இந்தப் போட்டிக்காக புதிய ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளது. 



  • May 01, 2024 18:17 IST
    சென்னை Vs பஞ்சாப்: நேருக்கு நேர்

    ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15ல் சென்னையும், 13 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.



  • May 01, 2024 18:15 IST
    சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்

    ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ் தோனி, மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, முஸ்தபிசுர் ரஹ்மான்.


    இம்பெக்ட் பிளேயர்: ஷர்துல் தாக்கூர்/சமீர் ரிஸ்வி



  • May 01, 2024 18:14 IST
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்

    பிரப்சிம்ரன் சிங்/ ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங். 

    இம்பெக்ட் பிளேயர்: ராகுல் சாஹர்



  • May 01, 2024 18:12 IST
    பிட்ச் ரிப்போர்ட் 

    இந்த சீசனில் சேப்பாக்கத்தில் உள்ள ஆடுகளம் முதல் இன்னிங்ஸில் பந்துவீசுவதற்கு சாதகமாக இருந்தது மற்றும் மாலை நேரம் பனிப்பொழிவு தொடங்கியவுடன் சிறப்பாக இருந்தது. எனவே டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச விரும்பலாம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஈரமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.



  • May 01, 2024 18:11 IST
    வானிலை அறிக்கை

     

    சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேடாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 ஆகவும் உள்ளது. மழை பெய்ய வாய்ப்பில்லை, பகல் முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும், இரவு நேரங்களில் வாடை காற்றுடன் கூடிய காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     



  • May 01, 2024 18:10 IST
    சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா சி.எஸ்.கே?

    சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றான பிளே -ஆப்க்கு அந்த அணி தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி அவசியமாகும். 

    நடப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணி சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் இதுவரை நடந்த ஐந்து போட்டிகளில் நான்கு போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியுற்றது. எனவே, இன்றைய ஆட்டத்திலும் வெற்றியைப் பெற்று ஆதிக்கம் செலுத்த நினைக்கும். 

     



  • May 01, 2024 17:38 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 

     



Chennai Super Kings Punjab Kings IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment