Advertisment

Tamil News Highlights: வன்முறை: மணிப்பூரின் 11 வாக்குச் சாவடிகளில் நாளை மீண்டும் வாக்குப் பதிவு

Tamil News Live Updates-20-04-2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manipur.jpg

Tamil news live

Tamilnadu | பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 36-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஐ.பி.எல் இன்று 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி- ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

முதல்கட்ட வாக்குப் பதிவு நிலவரம் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“ 

  • Apr 20, 2024 22:40 IST
    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – தி.மு.க கோரிக்கை

    தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும். ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருப்பதால் மாநில அரசின் செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, பொதுமக்களின் “வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தி.மு.க வழக்கறிஞர் வில்சன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்



  • Apr 20, 2024 22:12 IST
    வாக்காளர்கள் பெயர் நீக்கம்; கோவை ஆட்சியர் விளக்கம்

    தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்ய பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்பட்டது என வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்த புகார்களுக்கு கோவை ஆட்சியர் விளக்கம் அளித்தார்



  • Apr 20, 2024 21:47 IST
    உத்தர பிரதேச பா.ஜ.க வேட்பாளர் திடீர் மரணம்

    உத்தரப்பிரதேசம் மொரதாபாத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் கன்வர் சர்வேஷ் திடீரென இன்று மாலை மரணம் அடைந்தார். உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்



  • Apr 20, 2024 21:06 IST
    தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்

    தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • Apr 20, 2024 19:42 IST
    தமிழகத்தில் 69.46% வாக்குப்பதிவு; இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்

    மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளது



  • Apr 20, 2024 19:14 IST
    கர்நாடகாவில் மோடி கான்வாயில் அத்துமீறல் – காங்கிரஸ் நிர்வாகி கைது

    கர்நாடகாவில் பிரதமர் மோடி கான்வாயில் அத்துமீறல் செய்த காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கபல்லாபூரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் தடுப்பை மீறி, திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட முகமது நலபாட் கைது செய்யப்பட்டுள்ளார்



  • Apr 20, 2024 19:14 IST
    கர்நாடகாவில் மோடி கான்வாயில் அத்துமீறல் – காங்கிரஸ் நிர்வாகி கைது

    கர்நாடகாவில் பிரதமர் மோடி கான்வாயில் அத்துமீறல் செய்த காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கபல்லாபூரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் தடுப்பை மீறி, திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட முகமது நலபாட் கைது செய்யப்பட்டுள்ளார்



  • Apr 20, 2024 18:50 IST
    மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கான பாஸ்போர்ட் விதியை எதிர்த்த வழக்கிற்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தது தலைமை நீதிபதி அமர்வு



  • Apr 20, 2024 18:49 IST
    பாரிஸ் ஒலிம்பிக் - இந்திய வீராங்கனை தகுதி

    இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவில், 3 தகுதிச் சுற்றுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்ததுடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்



  • Apr 20, 2024 18:47 IST
    மாதாந்திய பயணச்சீட்டு விற்பனை ஒருநாள் நீடிப்பு

    மாநகர போக்குவரத்தின் மாதாந்திய பயணச்சீட்டு விற்பனை ஏப்ரல் 23-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 22-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், ரமலான் மற்றும் தேர்தல் விடுமுறை காரணமாக ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளது.



  • Apr 20, 2024 18:45 IST
    காவி நிறமான தூர்தர்ஷன் லோகோ : மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

    இந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மத்திய அரசின் சேனலான தூர்தர்ஷனின் லோகோ காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது, இது முற்றிலும் சட்டவிரோதமானது. இதன் மூலம் தேசிய ஊடகம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது தெளிவாக தெரிகிறது. இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? உடனடியாக லோகோவை மீண்டும் நீல நிறத்திற்கே மாற்ற வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.



  • Apr 20, 2024 18:43 IST
    தலைவர் 171 டீசர் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என அறிவிப்பு

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் தலைப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.



  • Apr 20, 2024 17:40 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ!

     

    நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தமைக்கும், முதல் பரப்புரையை திருச்சியில் தொடங்கியதற்கும், திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் சிறப்பாக களப்பணி ஆற்றியதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.



  • Apr 20, 2024 17:39 IST
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

    சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 22, 23ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!



  • Apr 20, 2024 17:23 IST
    மதுரை சித்திரை திருவிழா தேர் கட்டும் பணி நிறைவு

    கடந்த 12ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருக்கிறது. வரும் 22ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி தேர் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது 57 அடியில் சுவாமி தேரும், 45 அடியில் அம்மன் தேரும் தயாரானது. வரும் 23ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும்.



  • Apr 20, 2024 16:44 IST
    கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு - தமிழக எல்லையில் கண்காணிக்க உத்தரவு

    கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பை அடுத்து தமிழ்நாடு கேரளா எல்லையான புளியரை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். 



  • Apr 20, 2024 16:39 IST
    10 சிறப்பு ரயில்களை இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல் 

    மக்களவைத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17 முதல் 19 வரை, 10 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மொத்தமாக 8500-க்கு மேற்பட்டோர் இந்த ரயில்களை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக தெற்கு  ரயில்வே கூறியுள்ளது.



  • Apr 20, 2024 16:07 IST
     யானையின் பாச போராட்டம் 

    முதுமலை அருகே நெடுஞ்சாலை ஓரம் குட்டி யானையை புலி வேட்டையாடியது. இறந்த குட்டியின் அருகே, ஆக்ரோசத்தோடு சுற்றி பாசப் போராட்டம் நடத்தியது  தாய் யானை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு மாநில வாகன போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. 

     



  • Apr 20, 2024 15:54 IST
    தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள் - தி.க தலைவர் கி.வீரமணி அறிக்கை

     "தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.

     குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி! தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்? ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?

    அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது. ‘‘ஆரம்பத்தில் ‘அடானா’ (மகிழ்ச்சி ராகம்), முடிவில் ‘முகாரி’ (துன்பப் பாட்டு).’’ தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்?" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 



  • Apr 20, 2024 15:37 IST
    கள்ளக்குறிச்சி: நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் 

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வாசுதேவனூர் ஸ்ரீ மகாபாரதி பொறியியல் கல்லூரியில் உள்ள அறை சீல் வைக்கப்பட்டது.

    அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷ்ரவன்குமார் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைப்பெற்றது.



  • Apr 20, 2024 15:36 IST
    வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைப்பு 

    மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 1000 கன அடியிலிருந்து 822 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது.



  • Apr 20, 2024 15:36 IST
    உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம் 

    கோயிலில் பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என அறநிலையத் துறை உத்தரவை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

    சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலில், தரம் குறைந்த கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தர்கள் புகார் எழுப்பியிருந்தனர். புகாரையடுத்து பிரசாதம் விற்பனை செய்ய சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது அறநிலையத்துறை.

    உத்தரவை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததில், பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை என தெரியவந்ததை அடுத்தே அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதில் தலையிட வேண்டியதில்லை என நீதிபதி தெரிவித்தார்.



  • Apr 20, 2024 14:59 IST
    வனத்துறையினர் உதவியுடன் முதலையை பிடித்த ஊர் மக்கள்

    தஞ்சை: கடமங்குடி கிராமத்திற்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு வனத்துறையினர் உதவியுடன் முதலையை பிடித்த ஊர் மக்கள். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்ட முதலை.



  • Apr 20, 2024 14:25 IST
    அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி

    மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை. 



  • Apr 20, 2024 13:59 IST
    முதல் முறையாக வாக்களித்த பழங்குடியின மக்கள்

    நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர், வாக்களித்த்துள்ளனர் வெளியுலகத்துடன் எவ்வித தொடர்பும்மின்றி வாழும் இந்த பழங்குடியின மக்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் வாக்களிக்க உரிய பயிற்சியளிக்கப்பட்டுள்ளது இதன் படி வாக்களித்த பழங்குடியின மக்கள், அங்கிருந்த செல்ஃபி பூத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



  • Apr 20, 2024 13:57 IST
    அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு

    வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஏப்.21 - ஏப்.24 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் ஏப்.24 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 - 50%ஆக இருக்கக்கூடும் மற்ற நேரங்களில் 40 - 75%ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50 - 85% ஆகவும் இருக்கக்கூடும் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் - வானிலை மையம் எச்சரிக்கை



  • Apr 20, 2024 13:35 IST
    கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைகளில் தீவிர சோதனை

    கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலி.  கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைகளில் தீவிர சோதனை . வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரம். 



  • Apr 20, 2024 13:34 IST
    நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

    புதுச்சேரி, காரைக்காலில் நாளை மதுக்கடை மற்றும் பார்களை மூட உத்தரவு.  மகாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி துணை ஆணையர் உத்தரவு. 



  • Apr 20, 2024 13:00 IST
    ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கு

    என்.சி.பி. துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிரான புகார்களை விசாரிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

    ஞானேஷ்வர் சிங்கிற்கு இணையான பொறுப்பில் உள்ள மேற்கு மண்டல துணை தலைமை இயக்குநர் மணீஷ்குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை

    ஞானேஷ்வர் சிங் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதாக புகார்



  • Apr 20, 2024 12:23 IST
    மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்- தமிழிசை

    தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பூத் ஏஜென்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் குளறுபடியில், தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். வெள்ளி மற்றும் திங்களில் தேர்தல் வேண்டாம்.

    பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்



  • Apr 20, 2024 11:50 IST
    எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

    வாக்கு எண்ணும் மையங்களை 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணித்திட வேண்டும்

    அதிமுகவினர், கூட்டணி கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்



  • Apr 20, 2024 11:47 IST
    போதைப்பொருள் கடத்தல் விவகாரம்

    போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றம்.



  • Apr 20, 2024 11:14 IST
    கேரளாவில் பறவை காய்ச்சல்

    கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லை ஒட்டிய ஆனைகட்டி, வாளையாறு, முள்ளி, மேல்பாவி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

                                                                                            



  • Apr 20, 2024 11:01 IST
    இந்தியா பயணத்தை ரத்து செய்த மஸ்க்

    இந்தியா பயணத்தை திடீரென ரத்து செய்த மஸ்க்

    டெஸ்லா கார் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு இடங்களை ஆய்வு செய்யவும், பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவும் 22-ம் தேதி  எலான் மஸ்க் இந்தியா வர இருந்த நிலையில் அப்பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.  தவிர்க்க முடியாத காரணங்களால் பயணத்தை ஒத்தி வைப்பதாகவும். வேறொரு நாளில் இந்தியா வர ஆவலுடன் இருப்பதாகவும் மஸ்க் பதிவு



  • Apr 20, 2024 10:49 IST
    மணீஷ் சிசோடியா வழக்கு: ஏப்.30-ல் தீர்ப்பு

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைதான டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவு. தீர்ப்புக்காக ஏப்ரல் 30-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு



  • Apr 20, 2024 09:25 IST
    ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படும் இ.வி.எம்

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி தொடக்கம்.  சென்னையில் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்ட்ராங் ரூம் அமைப்பு 



  • Apr 20, 2024 09:15 IST
    தோனி பேட்டிங்: ஸ்மார்ட் வாட்ச்சில் வந்த எச்சரிக்கை

    சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ஆர்ப்பரித்த ரசிகர்கள் - ஸ்மார்ட் வாட்ச்சில் பதிவான எச்சரிக்கையை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த லக்னோ வீரர் குயிண்டன் டி காக்கின் மனைவி ஷாஷா.



  • Apr 20, 2024 08:55 IST
    மோடி இன்று கர்நாடகா வருகை

    கர்நாடகாவிற்கு பிரதமர் மோடி இன்று வருகை. கர்நாடகாவில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மாலையில் பிரசார பேரணி நடத்தவும் திட்டம். 



  • Apr 20, 2024 08:06 IST
    சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவு

    சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தது

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. கள்ளக்குறிச்சியில் 79.25% , சிதம்பரத்தில் 75.32% வாக்குகள் பதிவு. மாநிலத்தில் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27%,  வடசென்னையில் 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. 



  • Apr 20, 2024 08:02 IST
    தமிழகத்தில் 69.46% வாக்குப் பதிவு

    தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு. கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவு எனத் தகவல். 

    மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 2019 தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. 

     



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment