இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இன்று (மே 5) நடைபெற்ற நீட் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய தேர்வு முகமை (NTA) இன்று (மே 5) தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு இளங்கலை 2024 (NEET UG 2024) ஐ நடத்தியது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழக மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வு சற்று எளிதாக இருந்தது. உயிரியல் வேதியியல் எளிதாக இருந்தது. இயற்பியலில் அதிக எண்ணியல் அடிப்படையிலான கேள்விகளால் சற்று கடினமாக இருந்தது என தெரிவிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக தேர்வு சற்று எளிதாக இருந்ததாக கூறுகின்றனர். மேலும் ஓரளவு படித்திருந்தாலே 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். உயிரியல் ஈசியாக இருந்தது. ஆனால் கேள்விகள் நீளமாக இருந்ததால், விடையளிக்க சற்று அதிக நேரம் தேவைப்பட்டது. இயற்பியல் வழக்கம்போல் இருந்தது. வேதியியல் எளிதாக இருந்தது என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கடந்த முறையை விட இந்த முறை தேர்வு எளிதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி அடிப்படையிலே அமைந்திருந்தது. வேதியியல் கேள்விகள் நேரடியாக இருந்தது என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“