Advertisment

ரீ ரிலீஸ் போட்டி: அஜித்தின் தீனா - விஜய்யின் குஷி

தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ரீ ரிலீஸுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, அஜித் நடித்த தீனா மற்றும் விஜய் நடித்த குஷி திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Ajith Vijay dheena kushi

ஜித் நடித்த தீனா மற்றும் விஜய் நடித்த குஷி திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவுக்கு இந்த 2024-ம் ஆண்டு ஒரு ரீ ரிலீஸ் ஆண்டு என்று கூறலாம். ஏனென்றால், 'பாபா', 'கில்லி', 'பில்லா', 'மங்காத்தா', 'தீனா' மற்றும் 'குஷி' போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில், விஜய்யின் கில்லி படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அஜித் நடித்த தீனா மற்றும் விஜய் நடித்த குஷி திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற அல்லது ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படங்களை திரையரங்குகளில் மீண்டும் மறுவெளியீடு செய்கிற ரீ ரிலீஸ் போக்கு உருவாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி தனுஷ் நடித்த 3 திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த பாபா படம் அண்மையில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படங்களைத் தொடர்ந்து, விஜய் நடித்த கில்லி திரைப்படம் ஏப்ரல் 20-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் திரையரங்குகளில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ. 20 கோடி வசூலித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிற படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, அஜித்தின் 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' ஆகிய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி பில்லா, மங்காத்தா ஆகிய 2 படங்களும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் என்று இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். திரைப்படங்களின் ரீ ரிலீஸுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, மேலும் இரண்டு தமிழ்ப் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அஜித்தின் 'தீனா' மற்றும் விஜய்யின் 'குஷி' ஆகிய இரண்டு ரீ-ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளன. 

தமிழ் சினிமாவில், அஜித் மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறபோது, அவர்களின் ரசிகர்கள் இடையே, பேனர் வைப்பது, கொண்டாட்டம் ஆகியவற்றில் போட்டி காணப்படும். அதே போல, ரீ ரிலீஸிலும் அஜித்தின் தீனாவும் விஜய்யின் குஷியும் போட்டியில் குதிக்கின்றன.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அஜித்தின் 'தீனா' திரைப்படம் 2001-ல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அஜித் நடிப்பில் இந்தப் படம் முக்கியப் பங்கு வகித்தது, அதன் பிறகுதான் அவருக்கு ‘தல’ என்று பெயர் வந்தது. இந்த படத்தில், அஜித் உடன் லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அதே போல, இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், விஜய் நடித்த 'குஷி' திரைப்படம் 2004-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில், விஜய் உடன் ஜோதிகா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த 2 படங்களும் மே மாதம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment